“குங்குமத்தை அழித்து..” பெண்ணை பலாத்காரம் செய்து மதம் மாற சொன்ன இளைஞர்.. மனைவியும் உடந்தையாம்!!

88

பெங்களூர்: இளம்பெண் ஒருவரைப் பலாத்காரம் செய்து மதம் மாற மிரட்டியதாக இளைஞர் ஒருவர் மீது பரபர புகார் அளிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் இந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெண் ஒருவர் சமீபத்தில் போலீஸ் நிலையம் வந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த வழக்கை போலீஸ் விசாரிக்க ஆரம்பித்தவுடன் பல திருப்பங்கள் அதில் நடந்துள்ளது.

28 வயது திருமணமான அந்த பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை காட்டி, அவரை இஸ்லாம் மதத்துக்கு மாற மிரட்டியதாக ஒரு தம்பதி உட்பட 7 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பகீர்: இது குறித்து கர்நாடக போலீசார் கூறுகையில், “இது குறித்து அந்த பெண் புகார் அளித்துள்ளார். அந்த நபர் தனது மனைவியின் முன்னிலையிலேயே இந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். மேலும், நெற்றியில் குங்குமத்தை வைக்க விடாமல் புர்கா அணிய வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அந்த பெண் புகார் அளித்து இருக்கிறார்” என்றார்.

இதில் குற்றவாளி ரஃபிக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான அந்த பெண்ணை தொடர்பு கொண்டு அவரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றியுள்ளார்.

பிறகு இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதை வீடியோவாக பதிவு செய்த ரஃபிக், அதை வைத்து பிளாக்மெயில் செய்துள்ளார். அந்த பெண்ணை இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று மிரட்டியதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.


போலீஸ் சொல்வது என்ன: போலீசார் இது குறித்து மேலும் கூறுகையில், “இதில் ரஃபிக்கும் திருமணமானவர். அவர் தனது மனைவியுடன் சேர்ந்து தான் இதைச் செய்துள்ளார். அவரும் அவரது மனைவியும் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பெலகாவியில் உள்ள தங்கள் வீட்டிற்குக் கூட்டி வந்துள்ளனர்.

மேலும், தாங்கள் சொல்லும் அனைத்தையும் கேட்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். ரஃபிக் தனது மனைவியின் முன் வீட்டில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்” என்றார்.

மதம் மாற மிரட்டல்: இந்த மாதம் தான் அந்த தம்பதியினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் குங்குமம் வைக்கக்கூடாது என்று மிரட்டத் தொடங்கியுள்ளனர். மேலும், புர்கா அணிந்து ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறு கட்டாயப்படுத்தினர்.

தன்னை சாதி ரீதியாகத் திட்டியதாகவும் அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் வேறு மதத்திற்கு மாற வேண்டும் என்று கூறி திட்டியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.

தனது கணவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் அப்படி விவகாரத்து செய்யவில்லை என்றால் அந்தரங்க படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் ரஃபிக் மிரட்டியதாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், மதம் மாற வேண்டும் என்றும் மிரட்டிய ரஃபிக் மதம் மாறவில்லை என்றால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக அந்த பெண் கூறினார்.

அந்த பெண் அளித்த புகார் அடிப்படையில் ஏழு பேர் மீது சவுந்தட்டியில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. கர்நாடக மத சுதந்திர உரிமைச் சட்டம், ஐடி சட்டம். பலாத்காரம், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.