குழந்தையைத் தத்தெடுத்த பிக் பாஸ் நடிகை திடீர் கைது… பெங்களூருவில் பரபரப்பு!!

72

பெங்களூருவைச் சேர்ந்த பிக் பாஸ் கன்னட நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் கன்னட ஓடிடி சீசனில் பங்கேற்று புகழ் பெற்றவர் நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா. பெங்களூருவைச் சேர்ந்த இவர் சமூக ஊடகங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான நடிகையாவார். இவர் சமீபத்தில் சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுமியுடன் உள்ள வீடியோவை அடிக்கடி சமூக ஊடகங்களில் சோனு கவுடா பகிர்ந்து வந்தார். ஏற்கெனவே குழந்தைகள் தத்தெடுப்பு விவகாரம் தொடர்பாக சோனு கவுடா மீது குழந்தைகள் நலத்துறை சார்பில் படரஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சோனு கவுடாவை பெங்களூருவில் உள்ள படரஹள்ளி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். ஜே.ஜே. சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சோனு கவுடாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுதொடர்பாக சோனு வெளியிட்டுள்ள வீடியோவில், ஏழைச்சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தேன் என்று பாராட்டுங்கள். இல்லையென்றால் அமைதியாக இருங்கள். எதிர்மறையான கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் குறித்து சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.