கை கால்களை கட்டி மனைவியை கணவன் செய்த செயல்.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

962

காஞ்சிபுரம் மாவட்டம் வசித்து வருபவர் 45 வயதான தேவிபிரசாத். கார் ஓட்டுநராக பணிபுரியும் தேவிபிரசாத் பொது முடக்கம் காரணமாக வீட்டிலே இருந்துள்ளார்.

பிரசாத்தின் மனைவி சரஸ்வதி (37) வீட்டு வேலை செய்து வந்த நிலையில் இருவரும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடிக்கடி ஏற்படும் குடும்ப தகராரால் ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிதல் இன்றி வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனால், மன உளைச்சலில் இருந்த தேவி பிரசாத் இரவு (10.07.2020) அன்று தனது மனைவி சரஸ்வதியின் கை கால்களை கட்டிப் போட்டு, வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.


அதுமட்டுமில்லாமல் தேவி பிரசாத்தும் வீட்டின் மேற்க்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுர டி.எஸ்.பி மணிமேகலை இருவரது உடல்களையும் நேரில் பார்வையிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.