கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு தன் உயிரையே அர்ப்பணித்த உதவியாட்சியாளர்! கண்ணீர் விடும் குடும்பம்!

841

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கின்ற ஹூக்ளி மாவட்டத்தின் துணை ஆட்சியராக சேவையாற்றி வந்தவர் தேவதத்தா ராய் (வயது 38). இவர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், ஹூக்ளி இரயில் நிலையத்திற்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களை முகாம்களில் கொண்டு சேர்த்து, முகாம்களை சிறப்பாக நிர்வகித்து அனைவரின் பாராட்டுகளை பெற்று இருந்தார்.

இந்நிலையில், இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளது.இதனையடுத்து கொல்கத்தாவில் இருக்கும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை க டுமையான மூ ச்சுத்திணறல் பிரச்சனையால் அவதியுற்றுள்ளார்.


இதன் பின்னர் அங்குள்ள செராம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இவருக்கு கணவர் மற்றும் 4 வயது மகன் உள்ளனர். இவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.