கொரோனா வதந்தி எனத் தெரிவித்து கொரோனா பார்ட்டியில் பங்கேற்ற இளைஞன் பரிதாபகரமாக பலி!

880

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வதந்தி எனத் தெரிவித்து கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

கொரோனாவிற்கு ‘மாஸ்க் அணிவதால் பயனில்லை என்றும், கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை எல்லாம் வதந்தி என, அமெரிக்காவில் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனால் தற்போது, அமெரிக்காவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், ‘கொரோனா பார்ட்டி’ நடத்தும் அபாயகரமான பழக்கம் திடீரென தொற்றி வருகிறது. கொரோனா பார்ட்டியில் பங்கேற்றதால் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு, பரிசு என்ற விபரீத அறிவிப்பும் வெளியிட்டு வருவது நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது.


இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்டு தொற்றுக்கு ஆளாகி உயிரையும் பறிகொடுத்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொற்று ஏற்பட்ட பின் அந்த இளைஞர், நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன் என வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெக்சாஸ் மாகாண சான் பகுதியில் உள்ள மெத்தடிஸ்ட் என்ற மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜேன் ஆப்பிள்பை கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30 வயதாகும் அந்த இளைஞர் கொரோனா வைரஸ் என்பதே வதந்தி என நம்பியுள்ளார். அதனால் அவர், கொரோனா பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். கொரோனா பாதித்தவர்களும் அந்தப் பார்ட்டியில் பங்கேற்றதால் அவரும் தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞர்கள் கொரோனா தொற்றை அலட்சியப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தார்.