இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வரும் வார்டில் நீர்வீழ்ச்சி போல் மழை நீர் கொட்டிய சம்வம் வீடியோவா வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள ஒரு மருத்துவமனை கொரோனா வார்டில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தளத்தில் உள்ள துளையிலிருந்து கொட்டிய மழை நீரை சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் நடுக்கத்துடன் பாரத்துள்ளனர்.
இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்து செயல்படும் எல்-2 மருத்துவமனையின் கொரோனா வார்டு ஆகும்.
Crazy visuals from a #COVID ward at a hospital in west UP’s Bareilly . Rain water pours down from a hole in the ceiling as anxious patients look on … this is a L2 hospital functioning out of a private medical college … pic.twitter.com/GSWqwOAOlh
— Alok Pandey (@alok_pandey) July 19, 2020
பரேலி மாவட்ட நிர்வாகம் வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது,
இது கட்டுமானப் பணிகள் காரணமாக பிளம்பிங்கில் ஏற்பட்ட தவறு மற்றும் நோயாளிகள் விரைவில் வெளியேற்றப்பட்டனர் என தான் பிரேலி துணை மாஜிஸ்திரேட் இஷான் பிரதாப் சிங் கூறினார்.