கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணப்பெட்டியை கடத்தி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் துப்பாக்கி ஒன்றை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணப் பெட்டியுடன் தப்பிச் செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் பெண் பொலிஸ் அதிகாரி சாமர்த்தியமாக செயற்பட்டுள்ளார்.
குறித்த பெண் பொலிஸ் அதிகாரியும் புலனாய்வு அதிகாரிகள் இருவரும் சந்தேக நபர்களை துரத்தி சென்று பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணப்பெட்டியில் சுமார் 79 இலட்சம் ரூபா பணம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குடிபோதையில் இருந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் சந்தேக நபரிடம் போலி துப்பாக்கி ஒன்றே இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது சந்தேக நபரை கைது செய்வதற்கு பெண் பொலிஸ் அதிகாரியான வருனி போகஹவத்தயின் வீர செயலுக்கு பலரும் பாராட்டினை தெரிவித்துள்ளனர்.