கோலுன்றி நடக்கும் வயதில் தெருக்களில் நின்று கம்பு சுற்றும் பாட்டி! மில்லியன் பேரை வியக்க வைத்த வீடியோ காட்சி!!

999

கோலுன்றி நடக்கும் தள்ளாத வயதில் கம்பு சுற்றும் பாட்டி ஒருவரின் காணொளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாபாய் பவார் என்ற 85 வயதான இந்த மூதாட்டி, வயிற்றுப் பிழைப்புக்காக தெருக்களில் கம்பு சுற்றும் வித்தைக் காட்டி வருகிறார்.

லத்தி கத்தி எனப்படும் கம்பு சுற்றும் இந்த வித்தையை அவர் எட்டு வயதில் இருந்து கைக்கொண்டிருக்கிறாராம்.


எந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என்ற தன்நம்பிக்கையுடன் போராடும் அவரை பல மில்லியன் பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.