சட்டுன்னு உடல் எடையை குறைக்க மெட்டபாலிசம் நிறைந்த இந்த 4 உணவுகளை சாப்பிட்டாலே போதும்!!

761

எடை குறைக்க…

பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது அதிக உடல் எடை தான். உடல் எடையை குறைக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் அவசியம். அந்த வகையில் இந்த 4 உணவுகளை அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.

எடையை குறைக்க, மெட்டபாலிச சத்துக்களும் முக்கிய காரணங்காக இருக்கின்றன. இந்த சத்தினை அதிகரிக்கும் சில உணவு வகைகளை இங்கு பார்க்கலாம். மிளகாயில் கேப்சைசின் என்ற சத்தும், தெர்மோஜெனிக் எனப்படும் சத்துக்கள் உள்ளன.

இது, நம் உடலை உஷ்ணப்படுத்தி அதிகளவிலான கொழுப்பினை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க ஏதேனும் உணவை சமைக்க நினைத்தால், அதில் கொஞ்சம் மிளகாயை சேர்த்துக்கொள்ளுங்கள்.


கிரீன் டீயில் உள்ள அதிகமான ஆண்டி ஆக்ஸிடன்ஸ் சத்துக்கள் உடலில் உள்ள மெட்டபாலிச சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.

உடலில் மெட்டபாலிச சக்தியினை அதிகரிக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். பதப்படுத்தப்படாத இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடும் போது இவை செரிமானம் ஆக கொஞ்சம் அதிகமாகவே நேரம் எடுக்கும். இதனால் உடலில் உள்ள கலோரிகள் வேகமாக குறையும்.

மேலும் Greek yogurt, tofu, சுண்டல் உள்ளிட்டவை புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். சிட்ரஸ் வகை பழங்கள் உடல் எடையை குறைக்க எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்டவை சிட்ரஸ் வகை பழங்களுள் உதவும்.

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்கையில் இந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன் இந்த வகை பழங்களை சாப்பிடுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும்.