சந்தானம் படத்தில் அட்ஜெஸ்மெண்ட் கேட்ட அப்பா வயது இயக்குனர்… பகீர் கிளப்பும் யாஷிகா ஆனந்த்!!

86

யாஷிகா ஆனந்த்…

தமிழ் சினிமாவில் ஒரு கவர்ச்சி குயினாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யாஷிகா மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர். அதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.

முதன் முதலில் கவலை வேண்டாம் என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் இதற்கு முன்பாக சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் நடிக்க இருந்த யாஷிகா ஆனந்தை ஏதோ ஒரு காரணம் சொல்லி படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

இல்லாவிடில் சந்தானம் படம்தான் இவருக்கு முதல் படமாக இருந்திருக்கும். அதன் பின் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தார் யாஷிகா. அந்த ஒரு பிரபலத்தால் கிடைத்த வாய்ப்புதான் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற அடல்ட் திரைப்படம்.

மிகத் தைரியமாக அந்தப் படத்தில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் வரவேற்பை பெற்றார் யாஷிகா. சமீபத்தில் ரிச்சர்டு ரிஷி நடிப்பில் வெளியான ‘சில நிமிடங்களில்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.


இந்தப் படத்தை பற்றியும் அதில் தான் நடித்ததை பற்றியும் பேட்டிகளில் கூறிவருகிறார். அப்போது அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் பேசியிருக்கிறார். சந்தானம் படமான இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்து அதன் பின் தான் விலகியிருக்கிறார் யாஷிகா. இந்தப் படத்தில் நடிக்கும் போது யாஷிகாவுக்கு 13 வயதுதானாம்,

அப்போது படப்பிடிப்பு இடைவெளிகளில் யாஷிகாவை ஒரு நபர் தவறாக தொட ஓங்கி எட்டி உதைத்துவிட்டாராம் யாஷிகா. அதுமட்டுமில்லாமல் வேறொரு படத்திற்காக ஆடிசனுக்காக சென்ற யாஷிகா ஆனந்திடம் தன் அப்பா வயதுள்ள இயக்குனர் யாஷிகாவின் அம்மாவை வெளியே போக சொல்லிவிட்டு அட்ஜெஸ்ட்மெண்டு செய்தால் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறினார். அப்படி ஒரு வாய்ப்பு வேண்டாம் என எழுந்து வந்துவிட்டாராம் யாஷிகா. யார் அந்த இயக்குனர் என கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பாக இருக்கிறது.