சாத்தான்குளம் சம்பவத்தில் திடீர் திருப்பம் : கொலை வழக்காக மாற்றியது சிபிஐ..!

705

தூத்துக்குடியில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை, சிபிஐ கொலை வழக்காக மாற்றியது

ஊரடங்கை மீறி கடை வைத்ததாகக் கைது செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.


இந்த நிலையில், ஏற்கனவே சந்தேக மரணமாக வழக்காக விசாரித்து வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.