சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் மகன்! புகார் அளிக்க மறுத்த சம்பவம்!!

799

சினிமா பிரபலங்கள் சிலர் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானதாயினும் சிலர் விபத்துக்களிலும் அகப்பட்டுக்கொள்கிறார்கள். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்ததிலிருந்து பலரின் பார்வையும் ஹிந்தி சினிமா மீது தான் இருக்கிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் கோவிந்தாவின் மகன் யாஷ் வரதன் அஹூஜா மும்பையில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார்.

இரவில் பயணம் செய்த அவர் தன் காரை தானே ஓட்டியுள்ளார். அப்போது அவரின் காரின் முன்னே வேறொரு கார் திடீரென வந்ததால் யாஷின் கார் நிலை தடுமாறி அந்த காரின் மீது மோதியுள்ளதாக சொல்லப்படுகிறது.


இதனால் யாஷின் தோளில் காயம் ஏற்பட்டுள்ளதாம்.

மேலும் விபத்திற்கு காரணமான மற்றொரு காரின் டிரைவர் வருத்தம் தெரிவித்ததாகவும், மோதிய கார் யாஷின் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் என்பதால் காவல் துறையும் புகார் அளிக்க வில்லையாம்.