சிதைந்த உடல்… கல்லெறிந்து கொல்லப்பட்ட மகள்! கல்லறையில் கதறி அழும் தந்தையின் வீடியோ காட்சி!

803

பாகிஸ்தானில் மகள் கொல்லப்பட்டதை அறிந்து, தந்தை தனது மகளின் கல்லறையின் அருகே அழுது, நீதி கேட்டு கதறி அழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

பாகிஸ்தானில் கடந்த ஜுன் மாதம் 27-ஆம் திகதி சிந்து நெடுஞ்சாலை அருகே, தலையில் பலத்த காயங்களுடன் சிதைந்த நிலையில் உடல் கிடப்பதைப் பொலிசார் கண்டுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், Wadda Chachar கிராமத்தை சேர்ந்த Waziran என்ற 24 வயது பெண்ணே சிதைந்த நிலையில் கிடந்திருப்பது அடையாளம் காணப்பட்டது.

அதுமட்டுமின்றி, குறித்த பெண், கற்களால் தாக்கப்பட்டு, பலமுறை மரக் குச்சியால் தாக்கப்பட்டது போல் இருந்ததால், அவரது மரணத்தை ஒரு கெளரவக் கொலையாக இருக்கலாம் பொலிசார் கருதுகின்றனர்.


முதலில் உயிரிழந்த பெண்ணின் தந்தை Gurl Muhammed, மகளின் மரணம் ஒரு விபத்து என்று பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அதன் பின், அவர் பெண்ணின் கணவரான Allah Baksh மற்றும் அவரின் சகோதரர் Kareem ஆகியோரால் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

மகள் இப்படி கொல்லப்பட்டதை அறிந்தவுடன், Gurl Muhammed தன் மகளின் கல்லறை அருகில் நீதி கேட்டு கதறி அழும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மேலும், அவரின் மரணத்திற்கு மாமியாரும் ஒரு வகை காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே அடுத்தடுத்த தகவல்கள் வெளி வரும்.