சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைபடத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!!

977

நெல்சன் திலிப்குமார் எழுதி இயக்கும் தமிழ் அதிரடி நகைச்சுவை திரைப்படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் தெலுங்கு திரைப்படமான கேங்க்லீடர் புகழ் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் துணை வேடங்களில் யோகி பாபு மற்றும் வினய் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்க மற்றும் கலையரசு இணைந்து தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் முறையே விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஆர் நிர்மல் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


ஊரடங்கு காரணமாக அணைத்து படங்களின் படப்பிடிப்புகளின் தள்ளி போகும் நிலையில், தொடந்து புது படங்களை பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

தற்போது டாக்டர் படத்தின் சில புகைப்படங்கள் பகிரப்பட்டு சமூக வலைதளைங்களில் வைரலாகி வருகிறது. ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படத்தை குறித்த மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.