சிவக்குமாரை அசிங்கப்படுத்திய சீரியல் நடிகை.. நடிப்பே வேண்டாம் என தூக்கி எறிந்த மனுசன்! 2005 இல் நடந்தது என்ன?

794

தமிழ் சினிமாவில் உள்ள ஜாம்பவான் நடிகர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் நடிகர் சிவகுமார். பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1970களில் ஹீரோவாக கலக்கியவர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பல மேடை நாடகங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். சிவாஜி கணேசனின் செல்லப்பிள்ளை எனவும் அன்போடு அழைக்கப்பட்டவர்.

இன்னும் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் சிவகுமார் பார்க்க இளமையாக இருப்பதை போலதான் தோன்றுகிறது. ஆனால் இவ்வளவு நடிப்புத் திறமை உள்ள நடிகர் ஏன் திடீரென நடிப்பை விட்டு விலகினார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

அதை சரியாக புரிந்து கொண்ட சித்ரா லட்சுமணன், தனது டூரிங் டாக்கீஸ் சேனலில் அவரிடம் அந்த கேள்வியை கேட்டு அதற்கான விடையை பெற்றுக் கொடுத்து விட்டார். சிவகுமார் சினிமாவை விட்டு விலக ஒரு நடிகை தான் காரணமாம்.


1990களுக்குப் பிறகு சினிமாவில் பெரிய அளவு மார்க்கெட் இல்லாத சிவகுமார் சின்னத்திரை சீரியலில் ஹீரோவாக நடிக்க களமிறங்கி விட்டாராம். அதன் பிறகு பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பிட்டு சித்தி நாடகத்தை சொல்லலாம்.

2005 ஆம் ஆண்டு அப்படி ஒரு சீரியலில் முக்கியமான சென்டிமென்ட் காட்சி ஒன்று எடுக்கப்பட்டதாம். அப்போது உருகி உருகி அழுது கொண்டே சிவகுமார் நடித்த காட்சியை பார்த்து ஒரு நடிகை ஏளனமாக சிரித்து விட்டாராம்.

அதற்கு திடீரென சிவகுமார் கோபப்பட்டு அந்த நடிகையை மிரட்ட, இயக்குனரோ எதற்காக அவரை மிரட்டுகிறீர்கள் எனவும், எதுவாக இருந்தாலும் டப்பிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என அந்த நடிகைக்கு சப்போர்ட் பண்ணி கூறிவிட்டாராம்.

சிவகுமாரின் சினிமா அனுபவம் தான் அந்த நடிகைக்கு வயது. ஆனால் மரியாதை இல்லாத இடத்தில் இனி எந்த வேலையும் செய்ய மாட்டேன் என கூறிவிட்டாராம். இதனால் அப்பேர்பட்ட மகா கலைஞன் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என சத்தியம் செய்து விட்டு ஒதுங்கி விட்டாராம்.

வைராக்கியத்துக்கு பிறந்த மகன் போல, 15 வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். அதன்பிறகு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து அப்பா வேடத்தில் நடிக்க பல நடிகர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.