சீனாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மாவை, டென்செண்டின் நிறுவனத்தின் போனி மா பின்னுக்கு தள்ளி சீனாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, 50 பில்லியன் டொலர் மதிப்புள்ள டென்செண்டின் போனி மா(48 வயது) , ஜாக் மாவின் சொத்து மதிப்பை மிஞ்சியதனால், அலிபாபா நிறுவுனர் சீனாவில் மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலையை இழந்துள்ளார்.
சீனாவில் நீடிக்கப்பட்ட பூட்டுதலின் போது விளையாட்டாளர்கள் வீட்டிலேயே தங்கியிருந்ததால், டென்செண்டின் செல்வத்தை அதிகரிப்பதில் கொரோனா தொற்றுநோய் சாதகமாக இருந்துள்ளது.
மறுபுறம், அலிபாபா, கொரோனா வைரஸால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக ஆண்டின் முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் 88 சதவீதம் சரிந்துள்ளதாக அறிவித்திருந்தது.
“ஜனவரி பிற்பகுதியில் தொடங்கி எங்கள் உள்நாட்டு முக்கிய வர்த்தக வணிகங்களில் தொற்றுநோய் எதிர்மறையாக பாதிப்பை ஏற்படுத்தினாலும், மார்ச் மாதத்திலிருந்து நிலையான மீட்சியைக் கண்டோம்” என தலைமை நிதி அதிகாரி மேகி வு கூறிள்ளார்.
நிறுவனத்தின் நிகர லாபம் ஜனவரி-மார்ச் மாதங்களில் 447 மில்லியன் டொலர் சரிந்தது, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 25.83 பில்லியன் யுவான். டிசம்பர் 31 ஆம் திகதி வுஹானில் சீனா தனது முதல் வைரஸ் நோயைப் பதிவு செய்தது.
சீனாவில் வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றினால் மில்லியன் கணக்கான மக்கள் தனிமைப்பத்தப்பட்டதோடு, ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வைரஸின் உச்சத்தின் போது நாடு முழுவதும் மூடப்பட்டது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதால் டென்சென்ட் அதன் இணைய விளையாட்டுகளுக்கான தேவை அதிகரித்த பின்னர் முதல் காலாண்டில் நிகர லாபத்தில் கூர்மையான உயர்வு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டைவிட 29 சதவீதம் உயர்ந்து 3.95 பில்லியன் டொலராக இருந்தது.
“இந்த கடினமான காலகட்டத்தில், மக்களை இணைத்து, தகவல், உற்பத்தி மற்றும் பொழுதுபோக்குக்காக வைத்திருக்கும் இணைய சேவைகளை வழங்க நாங்கள் முயல்கிறோம்,” என்று தலைமை நிர்வாகி மா ஹுவாடெங் கூறியதுடன் ,”இதுவரை, எங்கள் வணிகங்கள் நெகிழக்கூடிய மற்றும் பணப்புழக்கத்தை உருவாக்கும் என்பதை நிரூபித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.