சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

804

இந்தியா- பாகிஸ்தான் எல்லை கோட்டில் இரண்டு தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என அடையாளம் காண்ப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாராவின் நௌகம் செக்டரில் ஊடுருவ முயன்றபோது இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள்.


இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாட்டு கோட்டில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து இரண்டு ஏ.கே .47 துப்பாக்கிகள், சீனாவில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு, பிஸ்டல்கள் மற்றும் பாகிஸ்தான் ரூபாய்கள் மீட்கப்பட்டன.