சுவிஸ் மதுபான விடுதியில் ஒரே ஒரு நபரால் 120 பேர் சிக்கலில்: 3 முக்கிய பகுதிகளில் அதிக பாதிப்பு!!

823

சுவிட்சர்லாந்தின் Graubünden மண்டலத்தில் மதுபான விடுதியில் பணிபுரியும் ஒரே ஒரு ஊழியரால் சுமார் 80 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Chur பகுதியில் அமைந்துள்ள அந்த மதுபான விடுதியில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், புதனன்று அந்த விடுதியின் சேவையை பயன்படுத்திய சுமார் 120 பேரின் அடையாளம் காணப்பட்டது.

இதில் 80 பேர் தற்போது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மண்டல செய்தித் தொடர்பாளர் வெள்ளியன்று தெரிவித்துள்ளார்.


இதே வேளை, Zuoz பகுதியில் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட, ஒருவர் தனிமைப்படுத்தலுக்கும் இரு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 18 சிறார்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

வியாழனன்று Pontresina பகுதியில் அமைந்துள்ள ஹொட்டலில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ள நிலையில், நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், 16 பேர் கண்காணிப்பில் உள்ளனர், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.