சுவிஸ் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் 29 வயது இளைஞன் கத்திகுத்துக்கு இலக்கானார்!!

831

சுவிட்சர்லாந்தின் லூசர்ன் ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

லூசர்ன் ரயில் நிலையத்தில் திங்களன்று நடந்த மோதலில் 29 வயதான துனிசியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையின் பின்னர், செவ்வாய்க்கிழமை மாலை ஒரு சோமாலிய நாட்டவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக புகைப்பட ஆதாரங்கள் உண்மையான குற்றவாளியை அடையாளம் காண வழிவகுக்கும் என பொலிஸ் தரப்பு நம்புகிறது.


கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்ததாகக் கூறப்பட்ட போதிலும், சம்பவ இடத்தின் புகைப்படங்களை எடுத்த சாட்சிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காவல்துறையினரின் விசாரணையின்படி, பாதிக்கப்பட்டவருக்கும் குற்றவாளிக்கும் இடையே லூசர்ன் ரயில் நிலையத்தில் வன்முறை தகராறு நடந்தது.

தொடர்ந்து அந்த தகராறு ஒரு கத்திக்குத்து தாக்குதலுடன் முடிந்தது என தெரிவித்துள்ளனர்.