சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில் வெளியாகும் கந்தசஷ்டி கவசம்! இன்ப அதிர்ச்சியில் தமிழ் ரசிகர்கள்!!

1379

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவுக்கு முருக பக்தர்கள், இந்து மத ஆர்வலர்கள் மட்டுமின்றி நடுநிலையாளர்களும் பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு அதிரடி அதிரடி நடவடிக்கை எடுத்து கருப்பர் கூட்டம் நிர்வாகிகளை கைது செய்தது.

அது மட்டுமின்றி கருப்பர் கூட்டம் யூட்யூப்பில் இருந்து சுமார் 500 வீடியோக்கள் நீக்கப்பட்டன.


இந்த நிலையில் சூப்பர் சிங்கர் பாடகி பிரியங்கா பாடிய கந்தசஷ்டி கவசம் யூட்யூப்பில் வெளியாக உள்ளது. இது ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, இந்துக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.