செருப்பு பிஞ்சிடும் நாயே… தனுஷ் ரசிகரை அடித்து துவம்சம் செய்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா: கேப்டன் மில்லர் விழாவில் பரபரப்பு!!

522

தொகுப்பாளினி ஐஸ்வர்யா..

சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற விழா மேடையில் கூல் சுரேஷ் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு மாலை போட்டு அவரை முகம் சுளிக்க வைத்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது தொகுப்பாளினி ஐஸ்வர்யா அந்த மாலையை அங்கேயே தூக்கி வீசி கூல் சுரேஷை முறைத்த நிலையில், மன்சூர் அலிகான் ஓடி வந்து இருவருக்கும் சமாதானம் செய்து வைத்தார். நேற்று கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் அதே தொகுப்பாளினி ஐஸ்வர்யா. அந்த நேரத்தில் தனுஷ் ரசிகர் ஒருவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொகுப்பாளினி ஐஸ்வர்யாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

ஆத்திரமடைந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா காலுல விழுடா என்றும் செருப்பு பிஞ்சிடும்.. நடிக்கிற நாயே.. அப்புறம் ஏன்டா ஓடுன என அந்த இளைஞரின் சட்டையை பிடித்துக் கொண்டு பின்னி பெடலெடுத்துவிட்டார். தொகுப்பாளினி அந்த இளைஞரை விளாசித் தள்ளும் காட்சியை ஒட்டுமொத்த கூட்டமும் கும்பலாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது.


வந்திருந்த ரசிகர்கள் அனைவருமே கேப்டன் மில்லர் நிகழ்ச்சியை மறந்து விட்டு கும்பலாக இந்த காட்சியை நேரில் ஆவலாய் பார்த்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை பெரும் கூட்டத்தில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ஆவேசத்துடன் திட்டி துவம்சம் செய்கிறார் எனில் அந்த நபர் மிகவும் கீழ்த்தரமான பாலியல் சீண்டலை தான் செய்திருப்பார் என பதிவிட்டு வருகின்றனர்.

தனுஷின் கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை காண வந்த ரசிகர் கூட்டத்தில் பெண் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் இத்தனை மோசமாக நடந்துக் கொண்டு அடி வாங்கியது அந்த நிகழ்ச்சிக்கே மிகப்பெரிய அவமானத்தையும், அசிங்கத்தையும் ஏற்படுத்தி விட்டதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.