சேலையால் கழுத்தை இறுக்கி பிடித்து தற்கொலைக்கு முயன்ற நளினி! சிறையில் நடந்தது என்ன? வெளியான தகவல்!!

852

தமிழகத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி தற்கொலைக்கு முயற்சித்தது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூரில் இருக்கும் பெண்கள் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இன்று சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாததின் காரணமாக நளினி திடீரென்று தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியானது. இந்நிலையில் நளினி தற்கொலைக்கு முயற்சித்தது ஏன்? நடந்தது என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி வெளியில் செல்லாமல் இருப்பதற்காக அவருக்கு உதவியாக சக கைதி ஒருவரை இருக்க சிறைத்துறை உத்தரவிட்டிருதது. அதன் படி கிருஷ்ணகிரியை சேர்ந்த, ராதா என்ற ஆயுள் தண்டனை கைதி, நளினியுடன் தங்கியிருக்கிறார்.


இதையடுத்து நேற்று இரவு ராதாவுக்கும், நளினிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் இது குறித்து ராதா சிறை அலுவலர் அல்லிராணியிடம் புகார் செய்திருக்கிஆர்.

அதன் பின், நளினியின் அறைக்கு சென்றதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நளினி கத்தி கூச்சல் போட்டுள்ளார். அப்போது வாக்கு வாதம் முற்றி நளினி சேலையால் தனது கழுத்தை இறுக்கியபடி தற்கொலை செய்து விடுவேன் என முயற்சித்துள்ளார்.

இது குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மத்திய, மாநில உளவுத்துறையினர், நளினி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக அறிக்கை அனுப்பியுள்ளனர்.

மேலும் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, 30 ஆண்டுகளாக சிறையில் நளினி பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார். அவருடன் உதவியாக உள்ள கைதி ஒருவரிடம் சாதாரண பிரச்சனைகளுக்காக அவர் தற்கொலை முயற்சி செய்து கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.