ஜெய்ஸ்ரீராம் என சொல்ல மறுத்த முஸ்லீம் இளைஞரின் நாக்கை கத்தியால் அறுக்க முயற்சி..! பட்டப்பகலில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

1160

பீகாரில் ஜெய் ஸ்ரீராம் என சொல்ல மறுத்த முஸ்லீம் இளைஞரின் நாக்கை இளைஞர்கள் ஒரு சிலர் அறுக்க முயற்சி செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முகம்மது இஸ்ரேல் என்ற இளைஞர் பீகாரை சேர்ந்தவர். கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி இவர்கள் வசித்து வரும் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் செல்போனில் சார்ஜ் போடுவதற்காக அருகில் இருந்த நண்பர் வீட்டிற்கு சென்றிருக்கிறார் முகமது இஸ்ரேல். ஆனால் போகும் வழியில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இஸ்ரேல் அருகிலிருந்த மோஷி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த இளைஞர் காணப்பட்டதால் அங்கு அவரது தேவையான சிகிச்சை வழங்க முடியாது என்று கூறி மருத்துவர்கள் அவரை முசாபர்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு வைத்து அந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த போலீஸார் முகமது இஸ்ரேலை விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. செல்போன் சார்ஜ் இடுவதற்காக நண்பர் வீட்டிற்கு செல்லும் பொழுது வழியில் இருந்த சில பேர் தன்னை தடுத்து நிறுத்தி ஜெய் ஸ்ரீராம் என்று கூறுமாறு வலியுறுத்தியதாக முகமது இஸ்ரேல் கூறியிருக்கிறார்.

ஜெய் ஸ்ரீராம் என்று கூற மறுத்த உடன் அவர்கள் அனைவரும் இணைந்து தன்னை சரமாரியாக தாக்கியதாகவும், கூடவே ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல மறுத்த நாக்கை அவர்கள் அறுத்தெறிய முற்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரத்தவெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்த முகமது இஸ்ரேலை பார்த்து அவர் உயிரிழந்துவிட்டார் என்று எண்ணி அந்த கும்பல் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளது. இதற்குப் பின்புதான் அவர் அந்த இடத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் முகமது அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


போலீசார் நடத்திய விசாரணையில், பதனா என்ற கிராமத்தை சேர்ந்த கோபால், ராகுல் பன்வரிலால், லாகான், பிரின்ஸ், அபிஷேக், நிதிஷ் சிங் ஆகியோர் இணைந்து தான் முகமதுவை சரமாரியாக தாக்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்குப் பின்பு அந்த இளைஞர்களையும் போலீசார் விசாரணை செய்துள்ளனர். அந்த இளைஞர்களிடம் விசாரித்த பொழுது தாங்கள் இந்த செயலை செய்யவில்லை என்றும் வீணாக எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கினை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.