டிக்டாக் செயலிக்கு பலமாக ஆப்பு வைக்க களமிறங்கியுள்ளது சிங்காரி | இந்த சிங்காரி உங்ககிட்ட இருக்கா?

1044

சமீபத்தில் ‘சீனா செயலிகளை அகற்று’ (‘remove China apps’) என்ற செயலி பிரபலமடைந்த நடவடிக்கைக்குப் பிறகு, பிரபலமான சீன செயலிகளுக்கு மாற்றாக புது செயலிகளை களமிறக்க இந்திய நிறுவனங்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்திய பயனர்களிடையே விருப்பு வெறுப்பைப் பெற்ற பயன்பாடுகளில் ஒன்று பிரபலமான குறுகிய வீடியோ பகிர்வு பயன்பாடான டிக்டாக் ஆகும். இந்த செயலிக்கு பல இந்திய மாற்றீடுகள் உள்ளன, அவற்றின் ஒன்று தான் சிங்காரி செயலி. இந்த புதிய சமூக ஊடக செயலி டிக்டாக் செயலிக்கு நேரடி போட்டியாளராக இருக்கிறது.

சிங்காரி என்பது குறுகிய வீடியோக்களை உருவாக்கவும் பகிரவும் பயன்படும் ஒரு செயலி ஆகும். இது மக்களுடன் அரட்டையடிக்கவும், மற்றவர்களின் உள்ளடக்கத்தைப் பார்த்தல், வீடியோக்களைப் பதிவிறக்குவது மற்றும் பகிர்வது போன்ற பல கூடுதல் அம்சங்களுடன் வருகிறது. இந்த செயலியை 2019 ஆம் ஆண்டில் பெங்களூரை தளமாகக் கொண்ட இரண்டு புரோகிராமர்கள் உருவாக்கியுள்ளனர், ஆனால் இது சமீபத்தில் கூகிள் பிளே ஸ்டோரில் 100,000 பதிவிறக்கங்களைத் தாண்டி சிங்கநடைபோட்டு வருகிறது.

சிங்காரி ஆப் அம்சங்கள்
டிக்டாக் செயலியின் போட்டியாளர் ஆன சிங்காரி பயனர்களுக்கு பிரபலமான செய்திகள், ஸ்டேட்டஸ் வீடியோக்கள், மீம்ஸ்கள் மற்றும் பலவற்றை வழங்குகிறது. இது ஆங்கிலம், இந்தி, கன்னடம், மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி மற்றும் பங்களா போன்ற பல்வேறு மொழிகளில் உள்ளடக்கத்தை ஆதரிக்கிறது. குறுகிய வீடியோக்களை இடுகையிட்டு உருவாக்குவதன் மூலம் பணம் சம்பாதிக்க இந்திய பயன்பாடு பயனர்களை அனுமதிக்கிறது. இது அவர்களின் வீடியோக்கள் வைரலாகும் வீதத்தின் அடிப்படையில் சம்பாதிக்க உதவுகிறது. மேலும், அவர்கள் ஒரு ஒவ்வொரு வியூஸ்க்கும் புள்ளிகளைப் பெறலாம், அவை பணமாக மீட்டெடுக்கப்படலாம்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சிங்காரி பயன்பாடு தனியுரிமையில் கவனம் செலுத்துகிறது மற்றும் வெளிப்படைத்தன்மையையும் அங்கீகரிக்கிறது. இது ஒரு இந்திய பயன்பாடாக இருப்பதால், தரவு பாதுகாப்பாக இருக்கும் மற்றும் வெளிநாட்டு சேவையகங்களால் கையாளப்படாது என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.


சிங்காரி செயலியை எவ்வாறு பதிவிறக்குவது?
டிக்டாக்கிற்கான இந்திய போட்டி செயலியான டிக்டாக்கை கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்க, நீங்கள் பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்.

உங்கள் ஸ்மார்ட்போனில் Google Play Store அல்லது App Store ஐத் திறக்கவும்
சிங்காரி (Chingari) என்று தேடுங்கள் சரியான செயலியைக் கண்டவுடன் கிளிக் செய்து இன்ஸ்டால் எனும் விருப்பத்தை தேர்வுசெய்க.
அவ்வளவுதான்! நீங்கள் மக்களுடன் பழகவும் பணம் சம்பாதிக்கவும் உதவும் சிங்காரி செயலியில் உங்கள் சொந்த குறுகிய வீடியோக்களை உருவாக்கி பகிர ஆரம்பிக்கலாம்.