டீயில் சீனி காணாததால் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூரன்!

935

இந்தியாவில் டீ-யில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார் (40). இவரது மனைவி ரேனு(35), மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

இன்று காலை வழக்கம் போன்று, ரேனு பப்லு குமாருக்கு டீ போட்டு கொடுத்துள்ளார், அதில் சர்க்கரை குறைவாக இருந்ததால் இருவருக்கும் சண்டை வந்துள்ளது.


வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பப்லு குமார், சமையலறை கத்தியால் ரேனுவின் கழுத்தை அறுத்துள்ளார்.

வலியால் ரேனு கதறித்துடிக்க மூன்று பிள்ளைகளும் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.தகவலறிந்து வந்த பொலிசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் தலைமறைவான பப்லுவை தேடி வருகின்றனர்.