தண்ணீர் நிறைந்த இடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 17 வயது சிறுமி! புகைப்படங்களுடன் வெளிவந்த தகவல்!!

838

அமெரிக்காவில் காணாமல் போயிருந்த 17 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை Montgomery நகர பொலிசார் வெளியிட்டுள்ளனர். Lesley Luna Pantaleon கடந்த 24ஆம் திகதி காரை ஓட்டி சென்ற நிலையில் காணாமல் போனார்.

காணாமல் போன அன்று கருப்பு சட்டை மற்றும் நீல நிற பேண்ட் அணிந்திருந்தார். இது குறித்து Lesley Luna Pantaleon-ன் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து பொலிசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நீர்நிலைகள் நிறைந்த பகுதியில் Lesley Luna Pantaleon சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தண்ணீரில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அது Lesley Luna Pantaleon-ன் உடல் என தெரிந்தது.


அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படாத இலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.