தன் 18 மாத பிஞ்சு குழந்தையை தீவிபத்தில் இருந்து காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த தாய்!!

786

தீயில் சிக்கிய தனது குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இளம் தாய் ஒருவரின் உடல் முழுவதும் தீ பற்றி, அவரது வாழ்க்கையே மாறிப்போன நிலையில் தற்போது அந்த பெண்ணிற்கு மேலும் பெருமை கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்தவர் கரோல் மேயர். பியூட்டி குயினான இருக்கு சுமார் 20 ஆடுகளுக்கு முன்னர் ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றது. கரோல் மேயரின் 18 மாத ஆண் குழந்தை இருந்த அறையில் திடீரென தீப்பற்றிய நிலையில் தனது குழந்தையை காப்பாற்ற போராடியுள்ளார் கரோல் மேயர்.

இந்த போராட்டத்தில் கரோல் மேயரின் உடலில் 85% தீ காயங்கள் ஏற்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே. உயிர் பிழைக்க பாதிக்கு பாதிதான் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இருப்பினும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிர் பிழைத்து மீண்டு வந்தார் கரோல் மேயர். ஆனால், அவரது தலை, முகம், உடல் என அனைத்து இடங்களிலும் தீ காயங்கள் ஏற்பட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் கரோல் மேயர்.

இந்த சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டநிலையில், இன்று கரோல் மேயருக்கு வயது 53. இந்நிலையில் லண்டனை சேர்ந்த பிரியான் கேஸி என்ற புகைப்பட கலைஞரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆடை இல்லாமல் தனது முழு உடலையும் காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் கரோல் மேயர்.

மேலும், இந்த புகைப்படங்கள் இந்த ஆண்டுக்கான மனிதத்திற்கான சிறந்த புகைப்படம் என்ற விருதினை வென்றுள்ளது. தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது குழந்தையை காப்பாற்றிய கரோல் மேயர் இந்த புகைப்படம் மூலம் தான்
மனநிறைவு அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.