தற்கொலை செய்து கொண்ட சசிகலா! 4 ஆண்டுகளாக மிரட்டி வந்த 2 சகோதரர்கள்… அதிர்ச்சி பின்னணி தகவல்!!

499

தமிழகத்தில் சசிகலா என்ற இளம்பெண்ணின் திருமணத்தை இரண்டு சகோதரர்கள் தடுத்து வந்ததோடு அவரை துஷ்பிரயோகம் செய்ததால் மனமுடைந்த அப்பெண் தற்கொலை செய்த நிலையில் கைதான குற்றவாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்பவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த சசிகலா கடந்த 24ம் திகதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கிய நிலையில், தனது தங்கையின் சாவில் மர்மம் உள்ளதாக சசிகலாவின் சகோதரர் அருண்பாபு புகார் கொடுத்தார்.

அத்துடன், தனது பெரியப்பா மகன்களான புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர்தான் இந்த சாவுக்கு காரணம், சசிகலா சடலத்தை தோண்டி இன்னொரு முறை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சுடுகாட்டிலேயே உட்கார்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார்.


இது தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது, அதன்படி புகாருக்கு உள்ளானவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரனும், அவரது சகோதரர் புருஷோத்தமன் என்பவரும் தான்.

இவர்கள் சசிகலாவை குளிக்கும்போது அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டி வந்ததோடு, 4 வருடமாக அவரை துஷ்பிரயோகம் செய்து வந்தனர்.

மேலும் சசிகலாவுக்கு நடக்க இருக்கும் திருமணத்தை அண்ணன்-தம்பி தடுத்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சசிகலா தூக்கு போட்டு தொங்கியே விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், சசிகலாவின் மரணம் தொடர்பாக புருஷோத்தமன் பொலிசில் சரணடைந்துள்ள நிலையில் தேவேந்திரன் தலைமறைவாக உள்ளார்.

இதனிடையில் புருஷோத்தமன் அளித்துள்ள வாக்குமூலத்தில், சசிகலா மீது எனக்கு ஆசை இருந்தது, அவர் இறப்பதற்கு முன்னால் கூட கன்னத்தில் அறைந்தேன் என கூறியுள்ளார்.