தாயின் வறுமையைப் போக்க மகள் போட்ட ஆண் வேடம்… நெகிழ வைக்கும் சம்பவம்!!

768

தனது தாயின் வறுமையைப் போக்குவதற்கு 7 வயது சிறுமி ஒருவர் ஆண் வேடமிட்டு சுக்குமல்லி கசாயம் விற்று வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை ஜோதிவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ரகமத்பானு என்ற அந்தப் பெண்ணின் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துள்ளார்.

இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. இரண்டாவது மகள் 7ம் வகுப்பும், மூன்றாவதாக சிறுவன் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கின் காரணமாக வேலையின்றி தவித்த தாய் சுக்குமல்லி கஷாயம் விற்று வந்துள்ளார். இந்நிலையில் தாய்க்கு 7 வயது சிறுமி உதவ நினைத்த போது மகளின் பாதுகாப்பினை நினைத்து கலங்கியுள்ளார்.


ஆதலால் தனது மகளின் முடியினை வெட்டியதோடு, சிறுமிக்கு ஆண்கள் அணியும் உடையினைக் கொடுத்து ஆணாக மாற்றி தற்போது சுக்குமல்லி கசாயம் விற்பதற்கு அனுப்பியுள்ளார்.

தற்போது இரண்டு பிள்ளைகளும் குட்டி சைக்கிளில் கசாயம் விற்று வருகின்றனர்.