தாய், சேய்க்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பம்!!

245

காஞ்சிபுரம்…

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பழைய காலனியை சேர்ந்தவர் ரகோத்தமன். இவரது மனைவி சத்யா (30). தம்பதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சத்யா கர்ப்பம் அடைந்தார். நேற்று மாலை 6.30 மணியளவில் சத்யாவுக்கு பிரசவவலி ஏற்பட்டதால் மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர் லத்திகா மற்றும் செவிலியர்கள் சத்யாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக சத்யாவின் உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சத்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்து உள்ளதாக கூறி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தாயும், குழந்தையும் இறந்துவிட்டதாக கூறி சத்யாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருவதால் காஞ்சிபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியட் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதுகுறித்து பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.