தினமும் டார்ச்சர்… கணவனை கொலை செய்த மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

419

சென்னை….

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(44). இவர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கனகவல்லி (34) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் பாலகிருஷ்ணன் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நேற்று இரவு வழக்கம்போல் பாலகிருஷ்ணன் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. உடனே கனகவல்லி தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கணவரை பிடித்து தள்ளியுள்ளார். இதில் சுவற்றில் மோதி விழுந்த பாலகிருஷ்ணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்.


இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கனகவல்லி உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாலகிருஷ்ணனை பரிசோதித்தனர்.

அப்போது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த நுங்கம்பாக்கம் போலீஸார், பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், மனைவி கனகவல்லியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.