திருமணமாகி 4 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான பிரபல நடிகரின் மனைவி..! அத்தையான தேவயானி..! எப்படி தெரியுமா?

570

பிரபல நடிகரும் நடிகை தேவயானியின் தம்பியான நடிகர் நகுல் தனது மனைவி கர்ப்பமாக உள்ளதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகிய பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் நகுல். அதன் பிறகு இவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக இவர் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் எனது இந்த பிறந்த நாள் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு ஸ்பெஷலான ஒன்றாகும். இந்த நேரத்தில் எங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் என்று அந்த பதிவில் நடிகர் நகுல் கூறியிருந்தார். உங்களுடைய வாழ்த்துக்கள் எங்களுக்கு வேண்டும் எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.


அந்த பதிவுடன் நடிகர் நகுல் தனது மனைவி கர்ப்பமாக உள்ளது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகர் நகுல் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் நகுலின் சகோதரி நடிகை தேவயானி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நகுல் திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அப்பாவாக உள்ளதால் இதன் மூலம் நடிகை தேவயானி அத்தையாக உள்ளார்.