தமிழகத்தில் கணவன் தனக்கு உதவி செய்யாததாலும், வேலை பளுவினால் கடுமையான மன அழுத்தம் காரணமாகவும் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியை சேர்ந்த தம்பதி ஹரி கணேஷ் – பிரிய தர்ஷினி. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆகியுள்ளது.
29 வயதாகும் பிரியா சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஹரி கணேஷ், தனியார் வங்கி ஒன்றில் மேனேஜராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான், பிரிய தர்ஷினி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து, உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அதன் பின் விசாரணை தொடங்கினர்.
முதல் கட்ட விசாரணையில், ஊரடங்கு காரணமாக பிரிய தர்ஷினி வீட்டில் இருந்து கொண்டு வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று, வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஏதோ வேலை விஷயம் காரணமாக ஹரி கணேஷிடம் இவர் உதவி கேட்டதாக தெரிகிறது.
அப்போது இருவருக்கும் இதன் காரணமாக சண்டை ஏற்பட, பிரிய தர்ஷினி ஒரு அறையிலும், ஹரி கணேஷ் ஒரு அறையிலும் சென்று உறங்கியுள்ளனர். மறுநாள் காலை பார்க்கும் போது, பிரிய தர்ஷினியின் அறை திறக்கப்படாமல் இருந்ததால், இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஹரி கணேஷ், உடனடியாக கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, பிரிய தர்ஷினி போனில், தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வேலைப்பளு காரணமாக கடந்த சில மாதங்களாகவே பிரியா மன அழுத்ததில் இருந்திருக்கிறார். இந்த மன அழுத்ததிற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.
இதனால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில், பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனாவை விட மன அழுத்தம் மிகப் பெரிய மோசமானதாக மாறிவருகிறது. இந்த மன அழுத்தம் காரணமாக அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.