திருமணமான பெண்ணுக்கு இருவரால் நடக்கவிருந்த கொடூரம்! தன் உயிரை பற்றி கவலைப்படாமல் கொழுந்தன் செய்த செயல்!!

939

இந்தியாவில் வீட்டில் இருந்த திருமணமான பெண்ணை தேடி வந்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 2 சகோதர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் ஷரதா நகரை சேர்ந்தவர் முன்னா. இவர் மனைவி சோனி தேவி. இந்த நிலையில் நேற்று தேவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் திடீரென அர்விந்த் மற்றும் சோட்டு என்ற இருவர் புகுந்து தேவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றனர்.

அந்த சமயத்தில் வீட்டுக்குள் தேவியின் மைத்துனர் ராமன் மற்றும் மகன் குமார் ஆகியோர் வந்த நிலையில் தேவியிடம் இருவரும் தவறாக நடக்க முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து அர்விந்த் மற்றும் சோட்டுவுடன் சண்டை போட்டு தேவியை காப்பாற்ற முயன்றார்கள். அப்போது ராமன் மற்றும் குமாரை அவர்கள் தலையில் இரும்பு கம்பியை கொண்டு தாக்கினார்கள், ஆனால் அண்ணியை காப்பாற்ற ராமன் தனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் போராடினார். ஒருகட்டத்தில் அர்விந்த் மற்றும் சோட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் தலையில் இரத்தம் வழிந்த நிலையில் இருந்த ராமன் மற்றும் குமாரை தேவி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் வழியில் அர்விந்த் மற்றும் சோட்டுவின் தாய் மீரா, சகோதரிகள் லதாதேவி, ரீனா ஆகியோர் தேவியை தடுத்து பிரச்சனை செய்தார்கள்.


பின்னர் எப்படியோ அவர்களை தேவி சமாளித்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு காயம்பட்ட ராமன் மற்றும் குமாருக்கு தலையில் கட்டு போடப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். அர்விந்த் மற்றும் சோட்டு குடும்பத்தாருக்கும் தேவி குடும்பத்தாருக்கும் முன் பகை இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பொலிசார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.