இந்தியாவில் திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தனது தோழியுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என கூறி அவர் இருக்கும் இடத்துக்கு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா குமாரி. இவர் தோழி சப்னா வர்மா.
இருவரும் தற்பால்சேர்க்கையாளர்களாக இருந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பூஜாவுக்கு குடும்பத்தார் கட்டாயப்படுத்தி பீகாரை சேர்ந்த அங்கித் என்ற இளைஞனை திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்தின் போது சப்னாவுடன் தனக்கு உள்ள உறவு குறித்து அங்கித்திடம் பூஜா கூறிய நிலையில் முதலில் அவருக்கு ஆதரவாக பேசிய அங்கித் பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து திருமணமான 10 நாட்களில் சப்னாவை தேடி வந்த பூஜா அவருடன் சேர்ந்து தனிவீட்டில் வாழ தொடங்கினார்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் பூஜா, சப்னா, அங்கித் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த விசாரித்தனர்.
அப்போது பூஜா தனது முடிவில் உறுதியாக இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கித் தானாக முன் வந்து அவரை சப்னாவிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அங்கிகாரம் அளித்தது குறிப்பிடத்தக்கது.