திருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி!

970

இந்தியாவில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் நிஷா (23). இவருக்கும் விஷ்ணு என்ற இளைஞனுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நிஷா தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

அந்த சமயத்தில் மகளை பார்க்க அங்கு வந்த நிஷாவின் தந்தை லட்சுமி நாராயணன் அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ந்தார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து நிஷாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.


மேலும் நிஷாவை வரதட்சணை கேட்டு அவரின் கணவர் விஷ்ணு, மாமனார் தயல் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொடுமைப்படுத்தியதாகவும் அதனால் தான் தனது மகள் இம்முடிவை எடுத்ததாகவும் நாராயணன் பொலிசாரிடம் புகார் அளித்தார், இது கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து பொலிசார் விஷ்ணு, தயலை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.