திருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்! எவ்வளவுக்கு தெரியுமா? பகீர் பின்னணி!

919

பாகிஸ்தானில் திருமணமான ஒருநாளுக்கு பின்னர், கணவன், மனைவியை வேறொரு நபருக்கு விற்றுவிட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் Gujranwala பகுதியைச் சேர்ந்த உஸ்மான் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான ஒரு நாள் கழித்து மனைவியை லாகூருக்கு பயணமாக அழைத்து செல்வதாக, மனைவியை உடன் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், அங்கு உஸ்மான் யாரோ ஒருவருக்கு தன்னுடைய மனைவியை சுமார் 6,600( இலங்கை மதிப்பில் 12,26,593 ருபாய் ) திர்ஹாமிற்கு விற்றுவிட்டு, அங்கிருந்து வந்துள்ளார்.

இதனால், அந்த நபரிடம் மூன்று வாரங்கள் சிக்கியிருந்த அந்த பெண், ஒரு வழியாக அவரிடம் இருந்து தப்பி, தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், உஸ்மான தன்னுடைய மனைவியை திருமணம் சுற்றுப்பயணமாக லாகூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு நபர் ஒருவரிடம் சுமார் 6,600 திர்ஹாமிற்கு விற்றுள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து மூன்று வாரங்களுக்கு பின் தப்பி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலு, அந்த பெண்ணின் பெயர் யார்? வாங்கியவர் யார்? இடையில் என்ன நடந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை, தொடர் விசாரணைக்கு பின்னரே அடுத்தடுத்த தகவல்கள் வெளி வரும்.