விஷால்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தும் பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். திருமணம் செய்து கொள்ளாத விஷால்,
சமீபத்தில் நியூயார்க் சிட்டியில் இளம் பெண்ணுடன் ஊர் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. ஆனால் அது தன் உறவினப்பெண் என்றும் ஒரு பிராங்க் என்றும் விஷாலே தெரிவித்திருந்தர்.
கடந்த 2010ல் இயக்குனர் திரு இயக்கத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் விஷால் நடித்திருந்தார். 3 பெண்களுடன் டேட்டிங் செய்யும் ரோலில் நடித்த விஷால்,
மீண்டும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தின் பிரமோஷனுக்கு தான் விஷாலின் அந்த பிராங்க் வீடியோ வெளியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.