தொல்லை கொடுத்த கணவன்… ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர செயல்!!

608

தேனியில்..

தேனி மாவட்டத்தில் கடன் கடலைமலைகுண்டு மாளிகை பாறை பகுதியில் பழைய கருப்பணசாமி கோவில் குடியிருப்பில் வசித்து வந்தவர் ராஜா. இவர் பைனான்ஸ் கொடுப்பது மற்றும் மாடுகள் வளர்ப்பது உள்ளிட்ட தொழில் செய்து வந்திருக்கிறார். இவரின் மனைவி ஜெயா.

அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி ஜெயாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார் ராஜா. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரவு வழக்கம் போல் மது அருந்தி விட்டு வந்த ராஜா, மனைவி ஜெயாவிடம் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.

பதிலுக்கு ஜெயாவும் கணவனிடம் சத்தம் போட்டு இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத ஜெயா அரிவாளை எடுத்து கணவரின் தலையில் வெட்டி இருக்கிறார். இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்து இருக்கிறார் ராஜா . ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கி கிடந்திருக்கிறார் .

அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த ஜெயா ஆட்டோவை அழைத்து வந்து கணவரை அதில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார் . ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் ராஜாவின் உடலை மீண்டும் வீட்டிற்கு எடுத்து வந்திருக்கிறார் ஜெயா.

கணவரை வெட்டி கொலை செய்த விவரம் ஆட்டோ ஓட்டுனர் மூலம் கடலைமலைகுண்டு போலீசாரிருக்கு தெரியவந்திருக்கிறது. புகாரியின் பேரில் போலீசார் உடனே வந்து ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். கொலையாளி ஜெயாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here