தோனி பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கி ட்டுத் தற்கொலை : திரையுலகமே அ திர்ச்சி..!

1072

பிரபல இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘Kai Po Che’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

2016ம் ஆண்டு வெளியான பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோணியாக நடித்ததன் மூலம் பெரிய அளவில் பெயர் பெற்றார். 34 வயதாகும் சுஷாந்த் இதுவரை பி.கே, ராப்டா, வெல்கம் டு நியூயார்க் போன்ற பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் நடிகர்களை ஈர்த்தார்.

இந்த 2020ம் ஆண்டு இவருடைய நடிப்பில் ‘Dil Bechara’ என்ற படத்தில் நடித்து வந்தார், இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் சுஷாந்த் தூ க்கிட் டு த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த இளம் வயதில் இவருடைய இந்த முடிவு பாலிவுட் மட்டும் இன்றி இந்திய சினிமா உலகத்தை அ திர்ச்சியிலும், சோ கத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஆனால், கடந்த வாரம் ஜுன் 8 இவருடைய எக்ஸ் மேனேஜர் திஷா த ற்கொ லை செய்துக்கொண்டராம்.


தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் !! பிரபல இந்தி நடிகரும் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி” திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவருமான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான, “காய் போ சே” திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பி.கே, ராப்தா, கேதர்நாத் உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்துள்ள இவர் தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அறியப்பட்டார். பாலிவுட் திரையுலகில் முன்னனி நடிகராக திகழ்ந்த 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட் பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் ஆவார். இவரது மரணம் திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.