தோழியின் குழந்தையை தன்னுடைய குழந்தை என வளர்த்த இளம்பெண்.. அதிர்ச்சிப் பின்னணி!!

40

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கல்லுக்குடம் பகுதியை சேர்ந்தவர் ஹெஸ்பெலின். இவரது மனைவி கிரைசைனி. இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரைசைனியின் வீட்டில் குழந்தை இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கிறிசைனியிடம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் தனது சொந்த குழந்தை என கூறியுள்ளனர்.

சந்தேகமடைந்த கிராம மக்கள் போலீசில் புகார் செய்தனர். அதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஆண் நண்பருடன் தகாத உறவால், தோழிக்கு குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தையை, சில நாட்கள் மறைவாக வைக்க, தன்னிடம் வைத்திருக்க சொல்லி ஒப்படைத்ததாகவும், கிரைசைனி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனே போலீசார் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.