நடிகை சமந்தா முத்தமிட்ட தோழிக்கு கொரோனா.. அதிர்ச்சியில் உறைந்துபோன ரசிகர்கள்..!

929

கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க சொல்லி அந்ததந்த அரசாங்கம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.


இந்நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையான சமந்தாவின் தோழி ஷில்பா ரெட்டி தனக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை என கூறியுள்ள அவர், தனது கணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், இவர் சமீபத்தில் சமந்தாவை சந்தித்தார். சமந்தா ஷில்பா ரெட்டிக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். இதனால் சமந்தா ரசிகர்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.