நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 2 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!!

57

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மகன் லோகேஸ்வரன் மற்றும் செல்வத்தின் மகன் சுந்தரமூர்த்தி இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று விடுமுறை தினம் என்பதால் நண்பர்களுடன் வைகை அணை முன்புறம் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றனர்.

லோகேஸ்வரன், சுந்தரமூர்த்தி இருவரும் குளித்தபோது அங்கு ஏற்பட்ட சுழலில் சிக்கியதில் பரிதாபமாக நீரில் மூழ்கினர். இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வைகை அணை போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன்,

தண்ணீரில் மிதந்துக்கொண்டிருந்த 2 கல்லூரி மாணவர்களின் உடல்களை மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வைகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேரங்காடியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.