நள்ளிரவில் 3 ஆண் நண்பர்களை சந்தித்தார்! தற்கொலை செய்து கொண்ட 19 வயது திருநங்கை… வெளியான பின்னணி தகவல்!!

912

சென்னையில் நள்ளிரவில் இளம் திருநங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சபினா (19). திருநங்கையான இவர் இரவு நேரங்களில் நுங்கம்பாக்கம் பகுதியில் தவறான தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சபினா தனது தோழியான மற்றொரு திருநங்கை ஷெபிக்கா என்பவருடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் நுங்கம்பாக்கத்துக்கு சென்றார். வள்ளுவர் கோட்டம் அருகில் வந்த போது அவர்களை இரவு ரோந்து பொலிசார் மடக்கி வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் இருவரும் பொலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து அபராதம் செலுத்திய பின்னர் வாகனத்தை திரும்பத்தருவதாக பொலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து திருநங்கை சபினா தனது கைகளில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தெறிந்தபடி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து அவர் நேராக தான் வசிக்கும் வசிக்கும் வீட்டிற்கு சென்று கோபத்தில் மாடிப்படிக்கட்டு ஓரத்தில் தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சபினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த நிலையில் இது குறித்து அதிர்ச்சி தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பொலிசார் கூறுகையில், திருநங்கை சபினா உள்ளிட்ட ஏராளமான திருநங்கைகள் வள்ளுவர் கோட்டம் அருகில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை இரவு ரோந்து வந்த பொலிசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

அப்போது சபினாவின் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் அபராதம் பெறப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டது. அவர் அந்த வாகனத்தில் ஏறி வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வழியில் சபினா தனது ஆண் நண்பர்கள் 3 பேரை சந்தித்துள்ளார்.

அவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் வீட்டுக்கு சென்று தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளார். இந்த விடயத்தை சபினாவின் தோழி ஷெபிக்கா எங்களிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். சபினா சந்தித்த ஆண் நண்பர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.