நான் சாவதற்கு பேய் தான் காரணம்! தற்கொலைக்கு முன் இளம் பெண் எழுதியிருந்த கடிதத்தில் இருந்த நம்ப முடியாத தகவல்!!

829

தமிழகத்தில் தற்கொலை செய்து இளம் பெண் ஒருவர் தன்னை பேய் மிரட்டுவதாக கூறி, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபி. கூலி வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்த தம்பதியின், மூத்த மகளான லத்திகா கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

தற்போது கொரோனா காரணமாக விடுமுறைக்காக வீட்டில் தங்கியிருந்த இவர் வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு இவரின் பிறந்த நாளின் பொது கூட, அவர் யாரிடமும் சரியாக பேசவில்லை. இந்நிலையில் தான், நேற்றிரவு லத்திகா திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவரின் அறையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில் தன்னுடைய தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து, அவர் பென்சில் மூலமாக அதில் எழுதியிருந்தார். அப்பா. அம்மா யாரோ என்னை பயமுறுத்துராங்க. அப்பா இரவு முழுவதும் தூக்கம் இல்லை. என்ன சாக வானு கூப்பிடுறாங்க.

இதை சொன்னா எல்லாரையும் கொல்லுவேன் என்று சொல்லுது அந்த பேய். என்ன சாக கூப்பிடுது என்னை ஏதாவது பண்ண சொல்லுதுபா இல்லைனா நம்ம குடும்பத்தை அழிப்பேன்னு சொல்லுதுபா.

யாரோ உங்களை வசியம் பண்ணனும்னு நினைக்கிறாங்க என்னோட பொருள் நான் பயன்படுத்திய எதுவும் தயவு செய்து வீட்டில் வைக்க வேண்டாம். எல்லாம் நன்மைக்கே தம்பி தங்கச்சி நீங்க அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கங்க. லவ் யூ மை பேமிலி என்று எழுதி வைத்துள்ளார்.

இதனால் பொலிசார் இது உண்மையில் லத்திகா தான் எழுதினாரா? அல்லது வேறு எதுவும் நடந்திருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.