`நாம் வாழ்வது பாகிஸ்தானா… ஆஃப்கானிஸ்தானா?’ – கன்னட நடிகை : நடந்தது என்ன?

36

பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா என்பவர், பெங்களூருவில் கன்னட மொழியில் பேசிய தன்னுடைய கணவரை உள்ளூர் கன்னடவாசிகள் பலர் துன்புறுத்திய சம்பவத்தைக் குறிப்பிட்டு `நாம் வாழ்வது பாகிஸ்தானா.

ஆஃப்கானிஸ்தானா என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். இதுகுறித்து நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த சம்பவத்தின் வீடீயோவை பதிவிட்டு, அப்போது என்ன நடந்தது என்பதையும் விளக்கியிருக்கிறார்.

அந்தப் பதிவில், `நம்ம பெங்களூருவில் உள்ளூர்வாசிகளான நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கிறோமோ… நாம் வாழ்வது பாகிஸ்தானிலா அல்லது ஆப்கானிஸ்தானிலோ… சில நாள்களுக்கு (ஏப்ரல் 2) முன்பு நாள்களுக்கு முன்பு பிரேசர் டவுன் பகுதிக்கு அருகில் உள்ள புலிகேசி நகர் மசூதி சாலையில் உள்ள `கராமா’ என்ற உணவகத்தில் ஒரு மாலை வேளையில் குடும்பத்துடன் இரவு உணவருந்தச் சென்றிருந்தேன்.

நாங்கள் சாப்பிட்டு முடிவித்துவிட்டு, வாலட் பார்க்கிங்கில் இருந்து எங்கள் காரை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரான போது, டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த என்னிடமும் கணவரிடமும் இரண்டு பேர் வந்து, `உங்களின் கார் பெரிதாக இருக்கிறது.

நீங்கள் காரை நகர்த்தினால் எங்கள் மீது உரசும்’ என வாதம் செய்துகொண்டிருந்தனர். அதற்கு என் கணவர், `நான் இன்னும் காரை நகர்த்தவில்லை, கொஞ்சம் ஒதுக்குங்கள்’ (கன்னடத்தில்) என்று கூறிவிட்டு, மெல்ல கரை நகர்த்தினார்.

அப்போது, அந்த இரண்டு பெறும் `இந்த கன்னடக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் (கன்னடத்தில்)’ என்று என் கணவரைத் தாக்க முயன்றனர். அடுத்த இரண்டு மூன்று நிமிடங்களில் 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல் வந்துவிட்டது. அவர்கள் இரண்டு பேர் என் கணவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.


உடனடியாக என் கணவர் சுதாரித்துக்கொண்டு தங்கச் சங்கிலியை என்னிடம் கொடுத்தார். பின்னர், ஒட்டுமொத்த கும்பலும் ஆத்திரமடைந்து எங்களின் காரை சேதப்படுத்த ஆரம்பித்தனர். அதோடு, உடல் ரீதியாக எங்களையும் தக்க முயன்றனர்.

காரில் பெண்களும், குடும்பத்தினரும் இருந்ததால் என் கணவர் எதுவும் செய்யவில்லை. `இவர்கள் கன்னட உள்ளூர்வாசிகள்’ என்று கூறினார். அப்போது, நாங்கள் கன்னடத்தில் பேசுவதுதான் அவர்களுக்குப் பிரச்னை என்பதைக் கவனித்தேன். நானும், என் கணவரும் கன்னடத்தில் மட்டுமே பேசியது அவர்களை மேலும் ஆத்திரமடையச் செய்தது.

பின்னர், அந்தப் பகுதியில் எனக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரிக்கு போன் செய்ததும், எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து சிதறிவிட்டனர். அதைத்தொடர்ந்து, அந்தப் பகுதியில் ரோந்து பணியிலிருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் உமேஷிடம் நடந்த சம்பவத்தை விவரித்தோம்.

ஆனால், அவர் எங்களுக்கு உதவ விரும்பவில்லை. உயரதிகாரியிடம் பேசவேண்டும் என்று கூறினார்’ என நடிகை ஹர்ஷிகா பூனாச்சா குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், இதுபற்றி யாரும் புகாரளிக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

அதற்கு, `எங்கள் குடும்பத்தினர் தங்களின் பாதுகாப்பு முக்கியம் என்று நினைத்ததால், போலீஸில் புகாரளிக்கவில்லை’ என்று ஹர்ஷிகா பூனாச்சா தெரிவித்திருக்கிறார்.