நிகழ்ச்சி தொகுப்பாளராகிறார் தமன்னா? ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?

963

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

15 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வருகிறார் தமன்னா.

தற்போது கைவசம் 2 படங்கள் உள்ள நிலையில் விரைவில் Talk Show ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்க போகிறார் என செய்திகள் வெளியாகின.


அதாவது, அல்லு அர்விந்த் தயாரிப்பில், ”ஆஹா” என்ற OTT தளத்திற்காக புதிய ஷோ ஒன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியை தமன்னா மற்றும் அல்லு அர்ஜுன் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளார்களாம். இதில் ஒரு எபிசோடுக்கு மட்டும் ரூ.7 லட்சம் சம்பளமாக வாங்கவுள்ளாராம் தமன்னா.

விரைவில் இந்நிகழ்ச்சியின் டீசருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.