படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. அதுவும் தன் அம்மாவிடம் : உண்மையை கூறிய முரட்டு குத்து பட நடிகை!!

83

யாஷிகா ஆனந்த்..

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் இருந்து நடிக்க ஆரம்பித்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த போது இரவுபார்ட்டி முடித்து வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார். படுத்த படுக்கையில் 4 மாதங்களாக சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது படங்களில் நடித்து போட்டோஷூட்டில் கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பெரிய தமிழ் இயக்குனர் ஆடிஷனுக்கு தன்னை அழைத்ததாகவும் ஸ்கிரீன் டெஸ்ட் முடித்துவிட்டு தன்னை வெளியில் நிற்கக்கூறிவிட்டு என் அம்மாவிடம் சில விசயங்களை பேசி இருக்கிறார். தன்னோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள யாஷிகா சம்மதம் தெரிவித்தால் வாய்ப்பு கொடுப்பதாகவும் அம்மாவிடம் கூறியிருக்கிறார்.


இதனால் தான் அதிகளவில் மன உளைச்சலில் மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெயர நான் வெளியிட்டால் மேலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தான் அவரின் பெயரை கூறாமல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், தன் வீட்டில் இருக்கும் ஒரு போலிஸ்காரர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர்மீது புகாரளித்து இடம் மாற்றம் செய்துவிட்டதாகவும் யாஷிகா ஆனந்த் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.