பணம் பெருக, வாஸ்து பிரச்னை நீங்க மஞ்சள் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

1322

மஞ்சள் என்பது நிதிப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குடும்பத்தில் இருக்க கூடிய நிதிப் பிரச்னைகள் சரி செய்யவும், வலி நிவாரணி, மருத்துவ தன்மை கொண்டதாக, வாஸ்து பிரச்னையை தீர்க்கும் மிக அற்புத பொருளாக மேலும் பல வகையான பிரச்னைகளுக்கு தீர்வாக அமையக் கூடிய மஞ்சள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் பற்றிய இங்கே காண்போம்…

உணவு, மருந்தை தாண்டிய மஞ்சளின் பயன்பாடு

இயற்கையான கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள், சில உணவுகளைத் தயாரிப்பதற்கு கட்டாயமாகும். சில முக்கியமான பூஜை கைங்கரியங்கள், திருமண விழா உட்பட சுப காரியங்கள், மஞ்சள் இல்லாமல் முழுமையடையாது. ஜோதிடத்தின் படி, மஞ்சள் குரு பகவானின் நேர்மறை ஆற்றலைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சில நோய்களுக்கும், காயங்களுக்கும் மஞ்சளை நேரடியாக ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வாஸ்து பிரச்னை சரிசெய்தல், நிதி சிக்கல்கள் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு தீர்வு தருதல் என அனைத்து வகையான தீர்வுகளையும் பற்றிய தகவல்கள் இங்கே பார்ப்போம்…

குரு பகவானின் சக்தியை அதிகரிக்க


ஜோதிடத்தின் படி, மஞ்சள் மங்களத்தை தரக் கூடிய குரு பகவானுடன் தொடர்புடையது. எனவே எப்போதும் ஒரு துண்டு மஞ்சள் நம்முடன் வைத்திருப்பதால் நம்முடைய வலிமையை அதிகரிக்கும். மங்கலகரமான மஞ்சளை கையில் வைத்துக் கொண்டு குரு பகவானை பிரார்த்தனை செய்வதும், குரு மந்திரத்தை உச்சரிப்பதாலும் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும்.

குரு பலம் குறைவாக இருக்கும் ஜாதக அமைப்பைப் பெற்றவர்கள் நல்ல குரு அருளைப் பெற அவர்கள் வியாழக்கிழமை தோறும், பச்சை மஞ்சள் துண்டு ஒன்றை சிறு மஞ்சள் துணியில், கட்டி கையில் கட்டிக் கொள்வதால் குரு பலம் கூடும்.

ஜோதிடத்தில் மஞ்சள் பயன்பாடு

மஞ்சள் சில சிக்கல்கள், பிரச்னைகளை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை விரட்டுதல், வீட்டின் குறைபாடு சரிசெய்தலுக்கு மஞ்சள் உதவியாக இருக்கும்.

எதிர்மறை ஆற்றலை அகற்ற மஞ்சள் பயன்படுத்தலாம்

நிதி மற்றும் சுகாதார பிரச்சினைகளையும் போக்கக் கூடிய ஆற்றல் மஞ்சள் பயன்பாட்டுக்கு உண்டு.

மஞ்சள் மங்களத்தை தரக்கூடிய சக்திகளை கொண்டுள்ளது, எனவே இது சுப நிகழ்வுகளின் போத் மற்றும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் அதிர்ஷ்டத்தைப் பெற மஞ்சளுடன் கிராம்பு சேர்த்து பயன்படுத்தும் போது நல்ல பலனை அளிக்க வல்லது.

​வாஸ்து பிரச்னையை நீக்க

வீட்டில் உள்ள வாஸ்து பிரச்னைகள் நீங்க 15 நாட்கள் தொடர்ந்து மஞ்சள் தூள் நீரில் கலந்து வீடு முழுவதும் தெளித்டு வரவும். சில வாரங்களில் உங்கள் வீட்டில் சுபிட்சம் கிடைக்கும். வீட்டின் முன் ஸ்வஸ்திக் முத்திரையை மஞ்சளில் போட்டு வந்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

ஒரு நல்ல காலைப் பொழுதில் ஐந்து மஞ்சள் துண்டுகளுடன், சிறிது அரிசியை சேர்த்து அதை 5 அடி நீளமுள்ள ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி வீட்டில் பத்திரமான புனிதமான ஒரு இடத்தில் வைக்கும் பட்சத்தில் தனகாரகனான குருவின் பலம் அதிகரித்து வீட்டில் செல்வங்கள் சேரும்.

​உத்தியோகம், தொழிலில் வெற்றி பெற

வியாழக்கிழமை குளிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். அது உங்களின் உடல் மற்றும் மன தூய்மை செய்யும். அதே சமயம், அண்டு மஞ்சள் திலக்கமிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றால், உங்கள் வேலைகள், தொழில், முயற்சிகள் என அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

வேலை, வணிகத்தில் வெற்றி பெற

நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், ஒரு நேர்காணலுக்குச் செல்வதற்கு முன் நெற்றியில் வாசனையான மஞ்சள் குங்குமம் வைத்து இறைவனை வணங்கி செல்லுங்கள். அப்போது நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். எந்தவொரு வியாபாரத்தையும் தொடங்கும் போது, அதற்கான கணக்கு பார்க்கக் கூடிய நோட்டு புத்தகத்தின் மீது மஞ்சள் தூளை தெளிக்கவும், இது உங்களுக்கான வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும்.

வியாபாரத்தில் தொடர்ந்து சிக்கலில் இருந்தால், வளர்பிறையில் வரக்கூடிய முதல் வியாழக்கிழமை ‘ஓம் நமோ பகவத்தே வாசுதேவய நமஹா’ என்று 108 முறை சொல்லி தியானிக்க வேண்டும்.

ஒரு மஞ்சள் துணியில் கருப்பு மஞ்சள், கோமதி சக்கரம் ஆகியவை கட்டி அதை கருப்பு துணியில் கட்டி வைக்க வேண்டும். இது உங்கள் வியாபாரத்தில் உள்ள அனைத்து சிக்கல்களையும் நீக்கும்.

​நிதி வசதி பெருக

ஒரு வெள்ளி குங்கும சிமிலில் கொஞ்சம் மஞ்சள் மற்றும் குங்கும பூ சேர்த்து அதை வெள்ளிக்கிழமைகளில் வீட்டு பூஜை அறையில் உள்ள மகாலெட்சுமி தேவியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து, நாம் பணம் வைக்கக் கூடிய பெட்டியில் வைக்கவும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அதை எடுத்து லெட்சுமி தேவியின் முன் வைத்து பூஜிக்கவும். அப்படி செய்து வர வீட்டில் லெட்சுமி கடாட்சம் கிடைக்கும். செல்வ நிலை அதிகரிக்கும்.