பல் வலிக்காக மருந்து சாப்பிட்ட இளம் பெண்..! மருந்து சாப்பிட்ட உடனே தோல் உடலில் இருந்து பிரிய தொடங்கியது..! பகீர் சம்பவம்..!

1207

பல் வலியால் பாதிக்கப்பட்ட 25 வயது இளம் பெண் ஒருவர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி உட்கொண்ட நிலையில் அவரது உடலில் உள்ள தோல் முழுவதும் எரிச்சல், அரிப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக உடலில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்து எடுத்துக்கொள்வது என்பது மிகவும் தவறான ஒன்று. ஆனால், நம்மில் பலரும் காய்ச்சல், தலைவலி, காதுவலி, பல்வலி போன்ற வழக்கமான பிரச்சனைகளுக்கு மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்து கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளோம்.

அந்த வகையில், தாய்லாந்தின் சோன்பூரி நகரைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் கடந்த மே 19 பல்வலியால் அவதிப்படுவந்தநிலையில் அருகில் உள்ள மருந்து கடை ஒன்றில் இருந்து ibuprofen எனப்படும் வலிநிவாரணி மாத்திரையை வாங்கி வந்துள்ளார்.

இதனை அடுத்து காலையில் ஒரு மாத்திரையையும், மதிய உணவுக்குப் பிறகு மற்றொரு மாத்திரையையும் சாப்பிட்டுள்ளார். மாத்திரை உட்கொண்ட சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் தோல் வலி மிகுந்து, படை நோய், தடிப்புகள் மற்றும் கொப்புளங்கள் போன்றவை ஏற்பட தொடங்கியுள்ளது.


சில மணி நேரத்தில் உடல் முழுவதும் எரிச்சல் அதிகமாகி, வலி தாங்கமுடியாத நிலையில் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கணவர் சோரசக்கைக் அந்த பெண் கேட்டுள்ளார். உடனடியாக அந்த இளம் பெண்ணை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதித்துள்ளனர்.

சுமார் 7 நாட்கள் அந்த பெண் ஒவ்வாமை எதிர்வினைக்கு சிகிச்சை பெற்ற நிலையில் இறுதியாக இந்த வாரம் வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிலரின் உடல் குறிப்பிட்ட உப்புகளுக்கு ஒவ்வாமை அளிக்கிறது. இந்த விஷயத்தில், மருந்து எடுத்துக்கொள்வதற்கு முன் எச்சரிக்கை மிகவும் முக்கியமானது. இதுபோன்ற ஒவ்வாமை காரணமாகத்தான் அந்த பெண் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே எந்த ஒரு உடல்நல குறைவாக இருந்தாலும் மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை இன்றே கைவிடுங்கள்.